அடப்பாவமே.. நடுரோட்டில்., பிக்பாஸ் ஜூலிக்கு இப்படி ஒரு பரிதாப நிலையா?..! ரூ.3 லட்சம் ஏமார்ந்து கண்ணீருடன் கதறல்..! இப்படியுமா இருப்பாங்க..!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் ஏகபோகமாக பிரபலமடைந்தவர் ஜூலி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்னதாக ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டத்தில் கலந்து கொண்டு பிரபலமானார்.
அதனை தொடர்ந்து பிக்பாஸில் இடம்பெற்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் பல்வேறு விதமான விமர்சனங்களை பெற்ற நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரதமிழச்சி என்ற பெயரிடப்பட்டவர், பிக்பாஸ்க்கு பின்னர் அந்த பெயரை களங்கப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.
ஆனாலும், பிக்பாஸ்க்கு பின்னர் இவருக்கு படவாய்ப்பு, ரியாலிட்டி ஷோ என பல நிகழ்ச்சிகளுக்கான அழைப்புகள் வந்தது. இவர் பிக்பாஸ்க்கு வருவதற்கு முன்னதாக செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், அவர் தொழிலை விட்டுவிட்டு சினிமாவிற்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தவமாய் தவமிருந்து சீரியலில் நடித்துவரும் ஜூலி, சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இப்படியாக தனது வாழ்நாளில் தான் ஏமாற்றப்பட்ட விஷயம் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார்.
அதாவது லண்டன் நகரில் அரசு வேலைக்காக மும்பை ஏஜென்சியிடம் ரூ.3 லட்சம் பணம் கட்டியிருந்த நிலையில், அந்த பணத்தை மும்பை ஏஜென்சி ஏமாற்றிவிட்டதாகவும், அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் நடுரோட்டில் அமர்ந்து பின்னர் தந்தையிடம் நடந்த விஷயத்தை தெரிவித்து வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.