ஒரு சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!

ஒரு சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்த சர்ச்சை.. அரை நிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை..! கழுவி ஊற்றும் ரசிகர்கள்..!!


Actress janaki sutheer glamour photo viral

மலையாளத்தில் ஒளிபரப்பப்பட்ட "பிக்பாஸ்" நிகழ்ச்சியில் கலந்து பிரபலமடைந்தவர் ஜானகி சுதீர். அமிர்தா வினோத் மற்றும் ஜானகி சுதீர் நடிப்பில் லெஸ்பியன் காதலை மையமாக வைத்து மலையாள படமான "ஹோலி பவுண்ட்"என்ற படம் SS Frames என்ற ஓடிடியில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் அசோக்.ஆர்.நாத் இயக்கிய நிலையில், சிறுவயதிலிருந்தே காதலித்து பின் பிரியவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட இரண்டு இளம் பெண்களின் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

Actress janaki sutheer

மேலும் விருப்பமின்றி திருமணம் செய்துகொண்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒரு பெண்ணும், வலுக்கட்டாயமாக கன்னியாஸ்திரி ஆக்கப்பட்ட மற்றொரு பெண்ணும் ஒரு கட்டத்தில் லெஸ்பியனாக மாறுவதே இந்த கதையாகும். இந்த திரைப்படம் மலையாளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

Actress janaki sutheer

இப்படத்தில் கன்னியாஸ்திரி லெஸ்பியனாக மாறுவது போல கதை இருப்பதால் அப்படத்திற்கும், படத்தில் நடித்த நடிகை ஜானகி சுதீருக்கும் எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது நடிகை ஜானகி சுதீர் அரை நிர்வாண போஸ்டரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில் இடுப்பில் மட்டும் உடையணிந்து மேலே எந்த ஒரு உடையும் போடாமல் நகைகளால் உடலை மறைத்தபடி போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் கண்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இதுதான் ஓனம் ஸ்பெஷலோ? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.