சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை! யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த மற்றுமொரு பிரபல நடிகை! யார் தெரியுமா?


Actress ivaana casting with sivakarthikeyan in sk15

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் Mr.லோக்கல். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், ராதிகா சரத்குமார், யோகிபாபு ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

sk15

படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் படம் வரும் மே 1 வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் Mr.லோக்கல் படத்தின் வேலைகள் முடிந்துள்ள நிலையில் தனது அடுத்த படமான SK14 படத்தில் மீண்டும் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இரும்புத்திரை பட இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

sk15

இந்த படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்சன் நடிப்பதற்காக ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில், இந்த படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவானா ஒப்பந்தமாகியிருக்கிறார். இவர் ஏற்கனவே நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவானாவின் பிறந்தநாளான இன்று இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.