வாவ்.. எதிர்நீச்சல் நந்தினியா இது.! இந்த கெட்டப்பு வேற லெவலில் இருக்கே.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!actress-haripriya-photoshoot-viral

சன் தொலைக்காட்சியில் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் காலை முதல் இரவு வரை பல தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவற்றில் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் எதிர்நீச்சல். பெண்கள் சுதந்திரம், ஆணாதிக்கம் ஆகியவற்றை கூறும் கதையாக இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

எதிர்நீச்சல் தொடரை இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். அவர் கோலங்கள் தொடரை இயக்கி வெற்றி அடைந்தவர். எதிர்நீச்சல் தொடரில் மதுமிதா, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்ரியா,சபரி பிரசாந்த், கமலேஷ், விபு ராமன், சத்யபிரியா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். அவர் உயிரிழந்த நிலையில் தற்போது அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.

எதிர்நீச்சல் தொடரில் நந்தினி கதாபாத்திரத்தில் வாழ்ந்து வருபவர் நடிகை ஹரிப்பிரியா. அந்த தொடரில் ஆதி குணசேகரனை எதிர்த்து நக்கலாக இவர் பேசும் பேச்சு, காமெடியான இவரது நடிப்பு ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அரேபியன் குயின் போல போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.