நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா??

நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் சோஹைல் யார்? அவர் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா??


Actress hansika future husband business

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. கொழுகொழுவென செம பப்ளியாக இருந்த இவரை ரசிகர்கள் சின்ன குஷ்பு என செல்லமாக அழைத்து வந்தனர். நடிகை ஹன்சிகா பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்து வந்த ஹன்சிகா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், அவர்களது திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் இணையத்தில் தகவல்கள் பரவியது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா ஈபிள் டவர் முன்பு தனது காதலர் சோஹைல் கதுரியாவுடன் இருக்கும் ரொமான்டிக்கான புகைப்படங்களை பகிர்ந்து தனது திருமணத்தை உறுதி செய்தார்.

Hansika

இந்த நிலையில் ரசிகர்கள் யார் அந்த சோஹைல் கதுரியா என்ற பெரும் ஆவலில் இருந்தனர். அவர் ஹன்சிகாவுடன் இணைந்து ஈவென்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி நடத்தி வந்துள்ளார். அப்பொழுதே இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. மேலும் 
சோஹைல் சொந்தமாக டெக்ஸ்டைல் கம்பெனியும் நடத்தி வருகிறாராம். அதன் மூலம் அவர் பல சர்வதேச நாடுகளுக்கும் ஆடை ஏற்றுமதி செய்து வருகிறார் என கூறப்படுகிறது.