சினிமா

அட நம்ம தேவையானியாக இது! நியூ லுக்கில் ஆச்சர்யபட வைக்கும் புகைப்படம் இதோ...

Summary:

அட நம்ம தேவையானியாக இது! நியூ லுக்கில் ஆச்சர்யபட வைக்கும் புகைப்படம் இதோ...

தமிழ் சினிமாவில்  அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தேவயானி. அதனைத் தொடர்ந்து  அவர் விஜய், அஜித், விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

 இந்தநிலையில் அவர் இயக்குனர் ராஜ்குமாரை காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இனியா மற்றும் பிரியங்கா என இரு மகள்கள் உள்ளனர்.

தமிழ்,மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்த தேவயானி தற்போது  ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் புதுபுது அர்த்தங்கள் என்ற தொடரில் நடித்து வருகிறார்.

மேலும் சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்க கூடியவர். இந்நிலையில்  நடிகை தேவயானி பேன்ட்-சர்ட் போட்டு மாடர்ன்  உடையில் போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி  வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள்  அட நம்ம தேவயானியாக இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதோ  அந்த புகைப்படம்....


Advertisement