சினிமா

புயல் பாதிப்புகளுக்கு நடுவே கவர்ச்சி போட்டோஷூட்! பிரபல நடிகை வெளியிட்ட புகைப்படத்தால் குவியும் கண்டனங்கள்!

Summary:

அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல்  கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜ

அரபிக்கடலில் உருவான ‘டவ்தே’ புயல்  கடந்த சில தினங்களுக்கு முன்பு குஜராத்தில் கரையை கடந்தது. கோரதாண்டவம் ஆடிய டவ்-தே புயலால் குஜராத், மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் ஏராளமான பகுதிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் கடல் பெரும் சீற்றம் அடைந்ததால்  கடலோரப் பகுதிகளில் இருந்த கட்டடங்கள், சாலைகள் கடுமையாக சேதமடைந்தன.

மேலும் டவ்-தே புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 175 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதால் ஏராளமான மரங்களும், மின் கம்பங்களும் சரிந்து விழுந்தன. இந்த நிலையில் புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு நடுவே நின்று நடிகை தீபிகா சிங் நடனமாடியும், வித்தியாசமான போஸ் கொடுத்து போட்டோஷூட்டும் நடத்தியுள்ளார். 

மேலும் அந்தப் புகைப்படங்களை அவர், புயலை நாம் தடுத்து நிறுத்த முடியாது, அதுவாகவே கடந்து போகும் என பதிவிட்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட இணையவாசிகள் நடிகை தீபிகா சிங்கிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
 


Advertisement