நடிகை பூமிகா இப்போ என்ன பண்றாங்க தெரியுமா.? வெளியான புகைப்படத்தால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டங்களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் பூமிகா சாவ்லா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறார்.

முதன் முதலில் தெலுங்கு மொழியில் யுவகுடு என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில திரைப்படங்கள் நடித்து வந்தார். தமிழில் முதன்முதலாக பத்ரி திரைப்படத்தில் அறிமுகமானார்.
இப்படத்திற்கு பின்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிப்பில் வெளியான ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் மிகப்பெரும் ஹிட் ஆனது. இதனை அடுத்து பெரிதாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்கவில்லை பூமிகா.

இதுபோன்ற நிலையில், தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைதளங்களிலும் அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.