"எனக்கு திருமணம் முடிந்து விட்டது" நடிகை அஞ்சலியின் பரபரப்பு பேச்சு.!?Actress anjali openup about her marriage

நடிகை அஞ்சலியின் திறைபயணம்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் அஞ்சலி. இவர் தமிழில் முதன் முதலில் 'கற்றது தமிழ்' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதன்பிறகு எங்கேயும் எப்போதும், அங்காடித்தெரு போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்தப் படங்கள் மிகப்பெரும் வெற்றியடைந்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றன.

anjali

இதன் பிறகு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிஸியான நடிகையாக இருந்து வந்தார். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். சில வருடங்களாக தமிழில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்ட அஞ்சலி, தற்போது இயக்குனர் ராம் இயக்கத்தில் ஏழு மலை ஏழு கடல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: நடிகை அஞ்சலியா இது.? உடல் மெலிந்து ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே.!?

anjali

பத்திரிக்கையாளர் சந்திப்பு

இது போன்ற நிலையில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அஞ்சலி பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவாரசியமாக பதில் அளித்து வந்தார். இதனை அடுத்து அஞ்சலிக்கு திருமணம் எப்போது என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அஞ்சலி, "எனக்கு நான்கு முறை திருமணம் முடிந்து விட்டது. சமூக வலைத்தளங்களில் எனக்கு ரகசிய திருமணங்கள் ரசிகர்களே செய்து விடுகின்றனர்.

 

திருமணம் குறித்து பேசிய அஞ்சலி

முன்பெல்லாம் இந்த மாதிரி வதந்தி குறித்து என் வீட்டில் கவலைப்பட்டார்கள். ஆனால் இப்போது நானே ஒரு பையனை கல்யாணம் பண்ணிட்டு வீட்டுக்கு போனாலும் நம்ப மாட்டாங்க. அந்த அளவிற்கு என்னை பற்றி வதந்திகள் பரவி வருகின்றன. திருமணத்திற்கு இன்னும் காலம் இருக்கிறது. இப்போது பிசியாக திரைத்துறையில் நடித்து வருகிறேன். நேரம் வரும்போது திருமணம் செய்து கொள்வேன்" என்று வெளிப்படையாக பேசினார்.

இதையும் படிங்க: பட வாய்ப்பு இல்லாததால் அந்த மாதிரி போட்டோஷூட் செய்யும் மடோனா.. வைரலாகும் வீடியோ.!?