அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவா!!

அஜித்தின் ரீல் மகள் அனிகாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா இவ்வளவா!!


Actress Anika net worth values

முதன் முதலில் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை அனிகா. 
அதனை தொடர்ந்து மீண்டும் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். மேலும் நானும் ரவுடிதான், மிருதன், போன்ற படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து கலக்கி வருகிறார். சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அனிகா அவ்வப்போது வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

​​​​​​Actress Anika

இந்நிலையில் தற்போது நடிகை அனிகாவின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன்படி அனிகா ஒரு வருடத்திற்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெருகிறாராம். அதனை வைத்து அனிகா இதுவரை 16 கோடி வரை சொத்து சேர்த்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.