சினிமா

2.0 படத்திற்கு ஆப்பு வைக்கும் நடிகை எமி ஜாக்சன்! செம கடுப்பில் இயக்குனர் ஷங்கர்!

Summary:

Actress amy jackson hot photos goes viral on internet

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக தயாராகிவரும் திரைப்படம் எந்திரன் 2.0. ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் மிகவும் விரைவில் திரைக்குவர இருக்கிறது.

படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இயக்குனர் ஷங்கரின் கடைசி படமான ஐ திரைப்படம் சரியாக ஓடாததால்  2.0 படத்திற்காக மிகவும் கவனமுடன் செய்லபடுகிறார் இயக்குனர் ஷங்கர். இந்நிலையில்  2.0 படத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் படம் '2.0'. அடுத்த மாதம் 29ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் நாயகியாக எமி ஜாக்சன் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஏற்கெனவே, 'ஐ' படத்தில் நாயகியாக நடித்த எமியை மீண்டும் '2.0' படத்தில் நடிக்க ஷங்கர் வாய்ப்பு கொடுத்தது அனைவர் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது. 'ஐ' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து, படம் வெளிவருவதற்கு முன்பும் தனது பல்வேறு ஆபாசமான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினார் எமி ஜாக்சன்.

இதனால் ஷங்கர் தனது 'ஐ' படத்தின் இமேஜ் குறையும் என வருத்தப்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளிவந்தன. ஆனால் மீண்டும் அதே தவறை தற்போது  2.0 படத்திலும் செய்துள்ளார் நடிகை எமி ஜாக்சன். படம் வெளிவர உள்ள நிலையில் மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இயக்குனர் ஷங்கரை கடுப்பேற்றியுள்ளார் நடிகை எமி ஜாக்சன். 


Advertisement