ரூ.15.75 கோடி மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய அக்சரா ஹாசன்.!

ரூ.15.75 கோடி மதிப்புடைய அடுக்குமாடி குடியிருப்பை வாங்கிய அக்சரா ஹாசன்.!



Actress Akshara Hassan Buy Apartment in Mumbai 

 

தமிழ் திரையுலகில் மாபெரும் நட்சத்திரமாக இருப்பவர் உலகநாயகன் கமல் ஹாசன். ஆழ்வார்பேட்டை ஆண்டவர் என ரசிகர்களால் அழைக்கப்படும் கமலுக்கு அக்சரா ஹாசன், சுருதி ஹாசன் என 2 மகள்கள் இருக்கின்றனர். 

இவர்கள் இருவரும் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்கள். கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

நடிகர் கமல் ஹாசனின் மகள் அக்சரா, அஜித்துடன் விவேகம், கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது அக்சரா ரூ.15.75 கோடி மதிப்பில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியது தெரியவந்துள்ளது. 

மும்பையில் உள்ள ஹார் பகுதியில், 2354 சதுர அடி பரப்பு கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை ரூ.15 கோடிக்கு வாங்கிய அக்சரா, அதற்காக ரூ.94.50 இலட்சம் ஸ்டாம்ப் டியூட்டி செலுத்தியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் அவர் அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார்.