அந்தப் படத்தை பார்த்துட்டு செருப்பால் அடித்து கொண்டேன்! நொந்துபோன நடிகை ஐஸ்வர்யா! ஏன் தெரியுமா??



actress-aishwarya-talk-about-roja-movie

தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில், அரவிந்த சாமி மற்றும் மதுபாலா நடிப்பில் வெளிவந்து செம ஹிட்டான திரைப்படம் ரோஜா. காதல் கலந்த ஆக்ஷன் படமான அந்த திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் பெருமளவில் விரும்பி பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சூப்பர் ஹிட்.

ரோஜா படத்தில் முதலில் ஹீரோயினாக நடிக்கவிருந்தது ஐஸ்வர்யாவாம். இவர் பிரபல நடிகை லட்சுமியின் மகள் ஆவார். இயக்குனர் மணிரத்னம் நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து ரோஜா கதை சொல்ல முயற்சி செய்தபோது, அவரது பாட்டி ஐஸ்வர்யா ஏற்கனவே தெலுங்கு படம் ஒன்றில் கமிட்டாகி அட்வான்ஸ் வாங்கி விட்டதாக கூறி திருப்பி அனுப்பி விட்டாராம்.

Roja

ஆனால் அந்த தெலுங்கு படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதாம். பின்பு மதுபாலா ஹீரோயினாக கமிட்டாகி அசத்தலாக நடித்து முடித்துள்ளார். பின்னர் கோயம்புத்தூரில் தியேட்டரில் ரோஜா படத்தை பார்த்துவிட்டு இப்படி சூப்பர் ஹிட் படத்தை மிஸ் பண்ணி விட்டோமே என தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் ஐஸ்வர்யா கூறியுள்ளாராம்.