புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கண்ணுபட்டுடும் அழகு!! நடிகை ஸ்னேஹாவின் மகன், மகள் மற்றும் குடும்பத்தை பாருங்கள்!! வைரல் புகைப்படம்..
நட்சத்திர ஜோடிகளான பிரசன்னா - சினேகாவின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஸ்னேகா. விஜய், சூர்யா, அஜித் என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். புன்னகை அரசி என ரசிகர்களால் அழைக்கப்படும் இவருக்கு தற்போதுவரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சினிமாவில் ஒருகாலத்தில் கொடிகட்டி பரந்த இவர் பிரபல தமிழ் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக இவர்களுக்கு தற்போது விஹான் என்ற மகனும், ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள் என பிஸியாகிவிட்ட ஸ்னேகா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இந்நிலையில் எப்போதும் சோசியல் மீடியாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஸ்னேகா எந்த ஒரு குடும்ப விழாவாக இருந்தாலும் தனது மகள் மற்றும் மகனுடன் வித விதமான ஃபோட்டோக்களை எடுத்துக் கொண்டு அதை இன்ஸ்டாவில் ஷேர் செய்வார். அந்தவகையில் ஸ்னேஹா ஷேர் செய்துள்ள அவரது குடும்ப புகைப்படங்கள் சில தற்போது சமூக வலைத்தளங்களில் வைராலகிவருகிறது.