சினிமா

அடல்ட் படத்தில் நடிக்கிறாரா யோகி பாபு? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Summary:

Actor yogibabu acting in adult horror movie

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகிபாபு. யாமிருக்க பயமேன் திரைப்படத்தில் பண்ணி மூஞ்சி வாயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார் நடிகர் யோகிபாபு. அதனை தொடர்ந்து பல்வேறு தமிழ் படங்களில் காமெடி நடிகராக நடித்துவருகிறார்.

மேலும் எமதர்மராஜா படத்தில் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. இந்நிலையில் அடல்ட் சம்மந்தமான காமெடி மற்றும் ஹாரர் படத்தில் நடிகை யாஷிகா ஆனந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்க உள்ளார் யோகி பாபு.

இந்தப்படம் பற்றி அதன் இயக்குனர் கூறுகையில் இந்த படத்தை நான் ‘அடல்ட் ஹாரர் காமெடி’ என்று குறிப்பிடுவதை விட ‘குறும்பு’ வகையாக படம் என சொல்வேன். அதை நியாயப்படுத்தும் வகையிலான ஒரு சரியான கதை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

எனவே நடிகர் யோகிபாபுவை காமெடி கலந்த அடல்ட் படத்தில் பார்க்க உள்ளனர் அவரது ரசிகர்கள்.


Advertisement