சினிமா

நடிகர் யோகிபாபுவின் புது வீட்டை பாத்திங்களா? இதோ புகைப்படம்!

Summary:

Actor yogi babus new house photos

தமிழ் சினிமாவில் யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இதில் இவர் நடித்திருந்த பண்ணி மூஞ்சி வாயன் கதாபாத்திரம் மாபெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன்மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிய தொடங்கின. மாதம் 10 படங்கள் வெளிவந்தால் அதில் குறைந்தது 8 படங்களிலாவது யோகிபாபு நடித்துள்ளார்.

தற்போது 17 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கும் யோகி பாபு விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார். அது போக தர்ம ராஜா, குர்கா ,ஜாம்பி போன்ற பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார் நடிகர் யோகிபாபு, அதற்கான பூஜை நேற்று நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ் அந்த வீட்டின் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். 


Advertisement