சினிமா

நடிகர் யோகி பாபு பற்றி யாரும் அறிந்திராத பல சுவாரசியமான தகவல்கள்!

Summary:

Actor yogi babu real character and unknown facts

யாமிருக்க பயமேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யோகி பாபு. இத்திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பண்ணி மூஞ்சி வாயன். இந்த கதாபாத்திரம் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் புகழை பெற்றுத்தந்துள்ளது.

இவரை திரையில் மட்டுமே பார்க்கும் பலருக்கும் இவர் வெறும் காமெடியன் என்று தான் தெரியும். ஆனால், இவரை பற்றிய பல உண்மைகள், உங்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது.

லொள்ளு சபா!
இயக்குனர் ராம் பாலா கண்டெடுப்பில் பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் அறிமுகமானவர் நடிகர் யோகி பாபு. யோகி பாபுவின் தனித்துவமான தோற்றம் கண்டு தான் ராம் பாலா இவரை தேர்வு செய்தார். இவரை நடிகராக / ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க தான் அழைத்தார் ராம் பாலா.

உதவி இயக்குனர்!
ராம் பாலாவிடம் பாலாவிடம் உதவி இயக்குனராக இரண்டு வருடம் பனி புரிந்த இவர் ஸ்கிரிப்ட் எழுதுவதிலும் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.

யோகி!
அமீரின் “யோகி” படம் தான் வெள்ளித்திரையில் யோகி பாபுவுக்கு அறிமுகம். இந்த படத்தின் பெயர் தான் இவர் பெயரின் முன்னாடி விசிட்டிங் கார்ட் போல ஒட்டிக் கொண்டது.

கால்பந்தாட்ட வீரர்!
சமீப காலமாக யோகி பாபு மாநில அளவில் கால்பந்தாட்ட வீரராக விளையாடியவர் என்ற செய்தியும் பரவலாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் காமெடியனாக மட்டும் ஜொலித்த யோகி பாபு.

ஆண்டவன் கட்டளையில் தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் எனவும் நிரூபித்தார்.


Advertisement