சினிமா

வாவ்.. செம கியூட்! தனது குழந்தைகளுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் ராக்கி பாய்! தீயாய் பரவும் வீடியோ!!

Summary:

வாவ்.. செம கியூட்! தனது குழந்தைகளுடன் ஜாலியாக கொஞ்சி விளையாடும் ராக்கி பாய்! தீயாய் பரவும் வீடியோ!!

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவந்த திரைப்படம் கேஜிஎஃப். இது ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் ஹீரோவாக யாஷ் நடித்திருந்தார். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்தே கேஜிஎஃப் 2  இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டது.

பான் இந்தியா படமான இது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி அடைந்துள்ளது. மேலும் இந்த படத்தில் மாஸ் ஹீரோவாக வலம் வந்த நடிகர் யாஷ்க்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

நடிகர் யாஷ்க்கு ஒரு மகள் மற்றும் மகன் என இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவர் அண்மையில் தன் குழந்தைகளுடன் அமர்ந்து ஜாலியாக கொஞ்சி விளையாடியுள்ளார். அந்த வீடியோவை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

 

 


Advertisement