சிம்பிளாக நடந்த நடிகர் விவேக்கின் மகள் திருமணம்.! தந்தையின் கனவை நனவாக்க அவர் செய்த விஷயத்தை பார்த்தீர்களா!!Actor vivek daughter marriage done yesterday

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விவேக். சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் விவேக்கிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது காமெடிகள் சிரிக்க வைப்பது மட்டுமின்றி மூடநம்பிக்கை, தீண்டாமை, சாதி வேறுபாடு, குழந்தை தொழில் போன்றவை குறித்து ரசிகர்களை சிந்திக்கவும் வைக்கும்.

நடிகர் விவேக் சினிமா வாழ்க்கையில் மட்டுமின்றி பொது வாழ்க்கையிலும் மற்றவருக்கு உதாரணமாகவே விளங்கினார். ஏபிஜே அப்துல் கலாம் ஐயாவின் கனவை நினைவாக்கும் வகையில் ஒரு கோடி மரம் நடுவரை தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்டு செயல்பட்ட நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

vivek

இந்த நிலையில், விவேக்கின் மகள் தேஜஸ்வினிக்கு நேற்று சிரஞ்சீவி பரத் என்பவருடன்,விருகம்பாக்கம் பத்மாவதி நகரில் உள்ள சின்ன கலைவாணர் சாலையில் அமைந்திருக்கும் அவர்களது வீட்டில் மிகவும் எளிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. நடிகர் விவேக்கின் மகள் தேஜஸ்வினி தன் தந்தையின் கனவை நனவாக்கும் நோக்கில் தனது திருமணத்தன்று மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளனர். மேலும் திருமணத்திற்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசாக வழங்கியுள்ளனர்.

vivek