நடிகர் விஷ்ணு விஷால் காதல் மனைவியை விவகாரத்து செய்ய இதுதான் காரணமா; அவரே கூறிய தகவல்.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் விஷ்ணு விஷால். முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் பெரிய பிரபலமானார் விஷ்ணு விஷால்.
அதன்பின்னர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இறுதியாக இவர் நடிப்பில் வெளியான ராட்சசன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ராட்சசன் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த அமலாபாலுடன் சேர்த்து கிசுகிசுக்கள் எழுந்தது. பின்னர் அது வெறும் வதந்தி என கூறி முற்றுப்புள்ளி வைத்தார் விஷ்ணு விஷால்.
கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி ரஜினி என்ற பெண்ணை நடிகர் விஷ்ணு விஷால் காதலித்து திருமணம் செய்தார். இதையடுத்து, இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், சில மாதங்களாக கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருந்த நிலையில், விவாகரத்து வாங்கினார் நடிகர் விஷ்ணு விஷால்.
இதுவரை விவகாரத்து வாங்கிய காரணத்தை தெரிவிக்காத விஷ்ணு விஷால் தற்போது அது குறித்து பேசியுள்ளார்: பல படங்களில் நடிகைகளுடன் நெருங்கி நடித்ததை மனைவி விம்பாதது தான் எங்களது பிரிவுக்கு காரணம். ஆரம்பத்தில் நான் ரொம்பவே கூச்சசுபாவம் கொண்டவன். ஆனால், திரைப்படங்களில் வெற்றி கிடைக்க இது சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து நடிகைகளுடன் நெருக்கமாக நடிக்க ஆரம்பித்தேன்.
இது எனது மனைவி ரஜினிக்கு பிடிக்கவில்லை. இதனால், எங்களுக்கு இடையில் சண்டை வந்தது. நான் காதலித்தவர் நீ இல்லை என்று சண்டை போட்டார். சினிமாவை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதனால், மோதல் வரவே இருவரும் பிரிந்து விட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், எனது மனைவியையும், மகனையும் உயிருக்கு உயிராக நேசிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். அவர்களும், அவ்வாறு நேசிக்கிறார்கள் என்பது எனக்கும் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.