சினிமா

சன் டிவி-ல் ரியாலிட்டி ஷோ...! தொகுத்து வழங்குபவர் யார் தெரியுமா?

Summary:

actor-vishal-to-new-commit

பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன் தற்போது நடிப்பையும் தாண்டி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் ரியாலிட்டி ஷோ வில் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார். அதில் முக்கியமான மற்றும் பிரபலமான ஒன்று தான் பிக்பாஸ். இவர் இந்த நிகழ்ச்சி முலம் தன்னை மக்களிடம் முழுமையாக தெரியப்படுத்தும் மேடை என்று நடிகர் கமலே தெரிவித்தார்.தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் டிவி-யை தொடர்ந்து சான் டிவி-ம் இது போன்ற ரியாலிட்டி ஷோ தொடங்க இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக நடிகர் விஷால் வருவதாக இருக்கிறது. இவர் தனது நடிப்பையும் தாண்டி பொது காரியங்களிலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. படங்களில் நடிப்பதைவிடத் தீவிரமாக நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றார்.

அதன் பிறகு நடிகர் விஷால் அவர்கள் ஆர்.கே.நகரில் நடைபெற்ற இடைத் தேர்தலிலும் போட்டியிட முயற்சி மேற்கொண்டார். இருப்பினும், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த 20 நாள்களுக்கு முன்னதாக அவரது ரசிகர் மன்றத்தை ‘விஷால் மக்கள் இயக்கம்’ என மாற்றினார். 

இந்த நிலையில், அவர் சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார். இன்னும் அந்த நிகழ்ச்சியின் பெயர் அறிவிக்கப்படவில்லை. அந்த நிகழ்ச்சிக்கான 11 விநாடிகள் ஓடக்கூடிய ப்ரோமோவை சன் டி.வி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த ப்ரோமோவில், ‘விதைத்தவன் தூங்கலாம். விதைகள் தூங்காது. அன்பை விதைப்போமா…’ என்று கேள்வி எழுப்புகிறார். இது என்னவா இருக்கும் என்ற கேள்வி மக்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது... 
 


Advertisement