சினிமா

விஜய் சேதுபதியின் செயலால், கோபத்தில் கொந்தளிக்கும் சிம்பு ரசிகர்கள்!

Summary:

actor-vijay-sethupathi-in-simbu-fans-angry

வியாழக்கிழமை மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் வெளியான வசூலை குவித்துக் கொண்டிருக்கின்றது. இதில்  பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளார்கள். நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி, ஜோதிகா, அதிதி ராவ் ஹைதேரி, ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இயக்குனர் மணிரத்தினத்தின் இந்தபடத்திற்கும் எப்போதும் போல இசைப்புயல்  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தை, மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமே தயாரித்து உள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படத்தில் சிலம்பரசனை, விஜய் சேதுபதி சுட்டுக் கொல்வதைப் போல் காட்சி இருந்தது. இதை கண்டித்து சிம்பு ரசிகர்கள் கோபத்தில் பேனர் வைக்கும் அளவிற்கு சென்றுள்ளனர். இந்த படத்தில் ஏத்தி என்ற கதாபாத்திரத்தில் வரும் சிம்புவை, ரசூல் என்ற போலீஸ் அதிகாரியாக வரும் விஜய் சேதுபதி சுட்டுக் கொல்லுவது போன்ற காட்சி அமைக்கப்பட்டிருந்து.

படத்தில் கூட சிம்புவை கொல்லப்படுவது ஏற்றுக் கொள்ள முடியாத அவரது ரசிகர்கள், “சிம்புவுக்கு ஒன்னுனா எவனா இருந்தாலும் வேற மாதிரி ஆயிரும்” என பதாகைகளை வைத்து விஜய் சேதுபதியை கண்டித்துள்ளனர்.

இந்த ரசிகர்கள் தங்களை சிம்பு ரசிகர்கள் என கூறுவதற்கு பதில், ‘சிம்பு வெறியன்’ என தங்களை பெருமையாக கூறிக்கொண்டுள்ளனர்.


Advertisement