நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ள புதுவை முதல்வர்! ஏன்? இதுதான் காரணமா??

நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று சந்தித்துள்ள புதுவை முதல்வர்! ஏன்? இதுதான் காரணமா??


actor-vijay-meet-puducheri-chief-minister

தமிழகத்தில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வரும் பிப்ரவரி 19 வாக்குபதிவு மற்றும் பிப்ரவரி 22 அதன் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடுகிறது. இந்நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் கட்சியின் கொடி, விஜய்யின் புகைப்படம் போன்றவற்றை பயன்படுத்தி பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு கட்சியினர் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று நடிகர் விஜய்யை அவரது பனையூர் இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.  சுமார் ஒரு மணி நேரம் இருவரும் பேசியுள்ளனர்.

இந்த நிலையில் இது மரியாதை நிமித்தமான சந்திப்பே என முதல்வர் ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இருவரும் அரசியல் பற்றிய பல விஷயங்களை பேசியுள்ளதாகவும், நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த சந்திப்பு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.