சினிமா

அய்யப்பன் கோவில் விவகாரம்!. நடிகர் விஜய்சேதுபதி பரபரப்பு பேச்சு!.

Summary:

அய்யப்பன் கோவில் விவகாரம்!. நடிகர் விஜய்சேதுபதி பரபரப்பு பேச்சு!.

சபரிமலை அய்யப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அடுத்து பல எதிர்ப்புகள் கிளம்பியது. சிலர் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் விமர்சித்தனர்.

உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடிகை திரிஷா, நடிகர் விஜய் சேதுபதி வரவேற்றுள்ளனர். இருவரும் நடித்துள்ள ‘96’ படத்தின் நிகழ்ச்சியில் திரிஷா கூறும்போது, சபரிமலைக்கு பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நல்ல தீர்ப்பு என கூறினார். 

மேலும் இந்த தீர்ப்பு பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மரியாதை. இவ்விவகாரத்தில் ஆழ்ந்த கருத்தை கூற இன்னும் அது பற்றி முழுமையாக அறிய வில்லை. ஆனாலும் யாரையும் தடுக்க கூடாது என கூறினார்.

இதனையடுத்து மக்கள் செல்வன் விஜய்சேதுபதி கூறும் போது, ‘‘ சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்கள் புனிதமானவர்கள். என் வாழ்க்கையில் அம்மா, மனைவி, மகள், தங்கை என பாசமுள்ள பெண்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கூறினார்.


Advertisement