திடீரென பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகர் வெங்கட்! அவரே வெளியிட்ட தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!actor venkat releaving from roja serial

சினிமாக்களை விட தொலைக்காட்சி சீரியல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் அத்தகைய சீரியலில் நடிக்கும் பிரபலங்களுக்கும் சினிமாவிற்கு இணையாக ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அவ்வாறு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் ரோஜா.

இந்த தொடர் தற்போது சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இத்தொடரில் அஸ்வின் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகர் வெங்கட் ரங்கநாதன். மேலும் அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான பாண்டியன் ஸ்டோரிலும் ஜீவா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவர் ரோஜா சீரியலில் இருந்து விலகுவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

actor venkat

அதில் அவர், நான் ஒரு செய்தியுடன் வந்துள்ளேன். அது சிலருக்கு மோசமான செய்தியாக இருக்கும். சிலருக்கு நல்ல செய்தியாக இருக்கலாம். அதாவது நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகிறேன். உங்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்தால் மன்னிக்கவும். ஆனால் பாண்டியன் ஸ்டோர் தொடரில் என்னை ஜீவாவாக தொடர்ந்து பார்க்கலாம். எனக்கு தொடர்ந்து உங்களது அன்பும், ஆதரவும் அளியுங்கள் எனக் கூறியுள்ளார்.