"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
பிரமாண்ட இயக்குனருடன் கைகோர்க்கும் நடிகர் சூர்யா! அதுவும் எந்த படத்தில் தெரியுமா?? வெளிவந்த அசத்தல் தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலிக்கும் நடிகர் சூர்யா நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தையே பெற்றது. அதனை தொடர்ந்து அவர் தற்போது வாடிவாசல் மற்றும் வணங்கான் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிகர் சூர்யா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா வேள்பாரி நாவல் குறித்து கூறியிருந்தார்.
இதற்கிடையில் வேள்பாரி என்ற நாவல் படமாக உருவாக இருப்பதாகவும், அதனை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குவதாகவும் தகவல்கள் வெளியாகியது. அதனை தொடர்ந்து அந்த வேள்பாரி படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும், இதில் நடிகர் சூர்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.