காமெடி நடிகர் சூரியின் மனைவியை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தவர் நகைச்சுவை நடிகர் சூரி. இவர் அப்படத்தில் பரோட்டாவை வைத்து காமெடி செய்ததால், பலரும் இவரை பரோட்டா சூரி என்றே அழைப்பர்.
அதனை தொடர்ந்து இவர் காமெடி நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், பூஜை, சிங்கம் 3, சீமராஜா, விருமன் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சூரி கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூரியின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெரும்பாலும் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படங்களை மட்டுமே பார்த்திருப்போம். சூரி மனைவியின் அரியவகை புகைப்படம் வெளியாகி உள்ளது.