சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
பிரபல மலையாள நடிகையுடன் ஜோடி சேரும் காமெடி நடிகர் சூரி... வைரலாகும் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் முதலில் திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னாளில் மிகப்பெரிய காமெடி நாயகனாக உருவெடுத்தவர் நடிகர் சூரி. இவரின் நகைச்சுவைக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நடிகர் சூரி - சிவகார்த்திகேயன் இணைந்து நடித்த பல படங்கள், அவர்களின் நகைச்சுவையால் அமோக வெற்றியை அடைந்தது. இவர்கள் இணைந்து நடித்த படங்கள் பெரும்பாலும் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாகவும் அமைந்தது.
இந்நிலையில் நடிகர் சூரி காமெடியனாக நடித்து கலக்கி வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக புதிய அவதாரம் எடுத்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து முதல் படமே இன்னும் திரைக்கு வராத நிலையில் அடுத்த படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க கமிட்டாகி யுள்ளார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க மலையாள நடிகை அன்னா பென் கமிட்டாகியுள்ளார்.