திடீரென 101 கிலோவில் இருந்து 71 கிலோவுக்கு மாறிய சிம்பு.! என்ன காரணம்?
திடீரென 101 கிலோவில் இருந்து 71 கிலோவுக்கு மாறிய சிம்பு.! என்ன காரணம்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் 'மாநாடு' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அப்படத்தின் ஷூட்டிங் தடைப்பட்டது.
இந்தநிலையில் சூசீந்திரன் இயக்கத்தில் 'ஈஸ்வரன்' என்ற படத்தில் சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் நேற்று மதியம் வெளியாகிய நிலையில், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் சிம்பு. இத்திரைப்படத்திற்காக சிம்பு அவரது உடல் எடையை 101 கிலோவிலிருந்து 71 கிலோவாக குறைத்துள்ளார். சிம்பு செய்த உடற்பயிற்சி, விளையாட்டு, நீச்சல், உணவு பழக்கம் இவையே அவர் உடல் எடை குறைந்ததற்கு காரணம் என அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிம்பு மிகவும் ஒல்லியான தோற்றத்துடன் டி -ஷர்ட் அணிந்துகொண்டு எடுத்த புகைப்படத்தை பதிவிட்டது செம வைரலானது. தற்போதைய சிம்பு லுக்கை பார்த்தால் தொட்டி ஜெயா காலத்து சிம்பு போல தோற்றம் அளிக்கிறார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.