சினிமா

20 கிலோவரை எடையை குறைத்த சிம்பு! இணையத்தை கலக்கும் சிம்புவின் நியூ கெட்டப்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Summary:

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளு பெயர் போன நடிகர்களில் ஒருவர் சிம்பு. எத்தனை சர்ச்சைகள் தன்னை சுற்றிவந்தாலும் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார் சிம்பு.

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளு பெயர் போன நடிகர்களில் ஒருவர் சிம்பு. எத்தனை சர்ச்சைகள் தன்னை சுற்றிவந்தாலும் அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவருகிறார் சிம்பு.

நடனம் ஆடுவதில் பெயர்போன இவர் தனது அதிக உடல் எடையால் நடிப்பதில் கூட சிரமத்தை சந்தித்துவந்தார். இந்நிலையில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தனது உடல் எடையை சுமார் 20 கிலோ வரை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு திரும்பியுள்ளார் சிம்பு.

தற்போது இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. இந்த படத்தில் சிம்புவுடன் இணைந்து இயக்குனர் பாரதிராஜா, நிதி அகர்வால் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார். அதில் தாடி வைத்து, உடல் எடையை குறைத்து இருக்கும் அவரது தோற்றத்தை கண்ட ரசிகர்கள் பழைய சிம்பு திரும்பி வந்துவிட்டார் எனவும், சிம்பு இஸ் பேக் எனவும் கமெண்ட் செய்துவருகின்றனர்.

 மேலும் 2021-ம் ஆண்டின் பொங்கலுக்கு இத்திரைப்படம் திரைக்கு வரும் என்ற அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

 

 இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஈஸ்வரன் படத்தின் புதிய ஸ்டில்களை வெளியிட்டுள்ளார்.


Advertisement