மன்மத லீலை தொடங்கியது.. டக்கரான ஸ்டைலில் மாஸாக லண்டனை வலம்வரும் STR..!
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களும் சர்ச்சையை சந்தித்து பின் நாட்களில் வெளியாவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் பத்துதல படத்தின் வெற்றிக்குப் பிறகு சிம்பு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனரான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் "எஸ்.டி.ஆர் 48" படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது. இந்த நிலையில் நடிகர் சிம்பு லண்டனில் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி தீயாக பரவி வருகிறது.