BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
அடேங்கப்பா! நடிகர் சிம்பு வாங்கியுள்ள புது காரின் விலை எவ்வளவு தெரியுமா?
நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சைதான். கடந்த சில வருடங்களாக சரியான வாய்ப்புகள் இல்லாததால் ஓரங்கட்டப்பட்டார் நடிகர் சிம்பு. எப்போதும் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவார் என கூறியவர்கள் பலரையும் தற்போது சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து ஆச்சர்யப்படுத்தி வருகிறாராம் சிம்பு.

கவுதம் மேனன் இயக்கிய அச்சம் என்பது மடமையடா திரைப்படம் நடிகர் சிம்புவிற்கு மீண்டும் உயிர் தந்தது. அதை தொடர்ந்து சில வாரங்களுக்கு முன்பு வெளியான செக்க சிவந்த வானம் அவரது புகழை மேலும் பலமடங்கு உயர்த்தியது.
தன்னுடைய வெற்றியை நண்பர்களுடன் ஏற்கனவே கொண்டாடி மகிழ்ந்த சிம்பு, தற்போது இந்த வெற்றியின் அடையாளமாக தனக்கு பிடித்த Bentley Continental GT என்ற உயர்ரக காரை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் விலை சுமார் 4 கோடி ரூபாயாம்.

சினிமா பிரபலங்கள் பலர், உயர்ரக கார் வாங்குவது பெரிய விஷயம் இல்லை என்றாலும், இந்த செய்தியை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.