சினிமா

இறப்பதற்கு முன் நடிகர் சேது கடைசியாக வெளியிட்ட வீடியோ..! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி.!

Summary:

Actor sethu corono awareness video

கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சேதுராம். மருத்துவரான இவர் பிரபல நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பர். ஒருசில படங்களில் நடித்துள்ள சேது, அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் மருத்துவ பணிக்கே சென்றுவிட்டார்.

இந்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு 8 . 30 மணியளவில் மாரடைப்பு காரணமாக தனது 36 வயதில் மரணமடைந்தார் சேது. சேதுவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவுக்கு ஆதரவாக, தான் இறப்பதற்கு முன் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் சேது. தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement