தமிழகம் சினிமா

முதன்முறையாக தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகர் சென்ராயன்.!

Summary:

actor sendraya with baby - vairal photo

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சென்ராயன். காமெடி, வில்லன் என இரண்டின் கலவையாக இருக்கும் இவரது நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள். பொல்லாதவன், ஆடுகளம், மூடா்கூடம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்தார்.

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது மூலம் அனைத்து ரசிகர்களின் ஆதரவையும் பெற்று மிகவும் பிரபலம் அடைந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கயல்விழி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதற்கு முன்பு, தனது மனைவி கர்ப்பமாக இருப்பதால் மிகவும் சந்தோஷம் அடைந்த சென்ராயன் தனது மனைவியின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றினார். அதாவது நடிகை சினேகாவை சந்திக்க வேண்டும் என்பது அவரது மனைவியின் நீண்ட நாள் ஆசையாக இருந்துள்ளது. எனவே சினேகாவின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் பிறந்து சில மாதங்களே ஆன தனது மகனை தூக்கி கொஞ்சி பாசமழை பொழியும் புகைப்படத்தை எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


Advertisement