கல்யாணம் எப்போ?? குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் அருண்.! ரசிகர்கள் வாழ்த்து!!
சாந்தனு பாக்யராஜ் திருமணத்தின்போது தாலி எடுத்துக்கொடுத்தது யார் தெரியுமா?? அவரா?? வைரலாகும் வீடியோ இதோ!!
நடிகர் சாந்தனு பாக்யராஜ் இன்று தனது 34 வது பிறந்தநாளை கொண்டாடும்நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு பாக்யராஜ். இவர் பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் அவர்களின் மகன் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து படங்களில் நடித்துவரும் சாந்தனு, தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்கிறார்.
சாந்தனு பாக்யராஜ் பிரபல டிவி தொகுப்பாளினி கீர்த்தியை திருமணம் செய்துகொண்டார். சாந்தனு ஒரு தீவிர தளபதி ரசிகர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்றே. இந்நிலையில் தளபதி விஜய் தாலி எடுத்துக்கொடுக்க, அவர் முன்னிலையில்தான் சாந்தனு பாக்யராஜ் கீர்த்திக்கு தாலி கட்டினார். அவரது பிறந்தநாளான இன்று அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.