திடீர் மூச்சு திணறல்! நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு!

திடீர் மூச்சு திணறல்! நடிகர் சஞ்சய் தத் மருத்துவமனையில் அனுமதி! வெளியான கொரோனா பரிசோதனை முடிவு!


actor sanjai Dutt admitted in hospital

பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், நேற்று சனிக்கிழமை மாலை திடீரென சுவாசக்கோளாறு மற்றும் நெஞ்சுவலியால் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

சமீபத்தில் தான் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தினர் கொரோனாவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்தநிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் சஞ்சய் தத் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என ரசிகர்கள் அஞ்சினர், 

ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்திருப்பது ரசிகர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது. எனினும், மருத்துவ கண்காணிப்பில் சில நாட்கள் இருப்பார். அவரது உடல் நிலை தற்போது நல்ல நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.