புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
நடிகர் சமுத்திரக்கனியின் மனைவி மற்றும் பிள்ளைகள் புகைப்படம்! நீங்க பாத்துட்டீங்களா?
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர், இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள். பெரும்பாலும் இவரது படங்கள் சமூக அக்கறைகொண்ட கருத்துக்களை கொண்ட படமாகத்தான் இருக்கும்.
தற்போது 44 வயதாகும் சமுத்திரக்கனி இயக்குனர் பாலச்சந்தரிடம் துணை இயக்குனராக தனது சினிமா பயணத்தை தொடங்கினார். நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, நாடோடிகள் 2 என 10 படங்களுக்கு மேல் இயக்கியுள்ளார் சமுத்திரக்கனி.
இயக்கத்தையும் தாண்டி பல்வேறு படங்களில் வில்லன், ஹீரோ என தனது நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். தற்போது RRR மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்துவருகிறார் சமுத்திரக்கனி.
இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால், இவரது மனைவி பெயர் ஜெயலட்சுமி, இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இதுவரை பெரிதாக வெளிவராத அவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அவர்களது புகைப்படம்.