ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே இருவருக்கும் விவாகரத்தா?.. இதுதான் உண்மை காரணமா?..! அதிர்ச்சி தகவல்..!!Actor Ranveer singh and Deepika Padukone's divorce

 

இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் கோலிவுட் சினிமாவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக கோச்சடையான் அனிமேஷன் படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இவரும், ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும் 6 வருடங்களாக காதலித்து, கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர்.

இவரது திருமணம் ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலராலும் பேசப்பட்ட நிலையில், சிலதினங்களுக்கு முன்னதாக தீபிகா படுகோனுக்கு உடல்நிலைகுறைவு ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளார்.

Actor Ranveer singh

இந்நிலையில் தீபிகா படுகோனேவும், ரன்வர் சிங்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாகவும், விரைவில் விவாகரத்து செய்ய இருப்பதாகவும் இணையத்தில் தகவல் பரவியுள்ளது. சில மாதங்களாகவே இருவரும் இணக்கமாக இல்லை என்றும், கணவன் மனைவி உறவில் இடைவெளி அதிகமாக இருக்கிறது என்றும், விவாகரத்து செய்யும் வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

மேலும் ரன்வீர்சிங்கை விட, தீபிகா படுகோனேவுக்கு சம்பளம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் சிலர் கூறிவருவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இருதரப்பினரும் தங்களது பிரிவு குறித்து உறுதிப்படுத்தினால் மட்டுமே உண்மை தெரியவரும்.