"இந்தியா இல்லையென்றால் நீயும்., நானும் இல்லை" - தேசப்பற்றுடன் ஒவ்வொருவருக்கும் ரஜினிகாந்த் வேண்டுகோள்.. செய்திடுங்கள்..!

"இந்தியா இல்லையென்றால் நீயும்., நானும் இல்லை" - தேசப்பற்றுடன் ஒவ்வொருவருக்கும் ரஜினிகாந்த் வேண்டுகோள்.. செய்திடுங்கள்..!


Actor Rajinikanth request to indians about 75th independence day

இந்தியாவின் 75-வது சுதந்திரதின விழா வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை பெரியளவில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில், அசாதி கி அம்ரித் மஹாஉத்சவ் என்ற இந்த நிகழ்வு 75 வாரங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் இதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்ததை தொடர்ந்து, ரஜினிகாந்தும் அதில் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் சமூக வலைதளங்களில் உள்ள இந்தியர்கள் தங்களது முகப்பு படமாக தேசியக்கொடியை வைக்கவும், ஒவ்வொரு இந்தியர்களின் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Actor Rajinikanth

இதன் காரணமாக நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தேசியக்கொடியை முகப்பு படமாக முன்பே வைத்திருந்த நிலையில், நேற்று போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுவாசலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Actor Rajinikanth

இந்நிலையில் தற்போது ரஜனிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், "75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜாதி, மத, கட்சி வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களும் 2 அடி அல்லது 3 அடி கம்பில் தேசியக்கொடியை ஏற்றி வைக்க வேண்டும்" என்று கேட்டுள்ளார்.

மேலும் "பள்ளி குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மூலம் இதனை செய்யுங்கள்" என்றும் கூறியுள்ளார். அத்துடன் இறுதியாக "நாடு இல்லைன்னு சொன்னா நாம இல்லை" என்று கூறிய ரஜினிகாந்த் "ஜெய்ஹிந்த்" என்று முழக்கமிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.