"தமிழக மக்களை போல முட்டாள்கள் கிடையாது" நடிகர் ராதாரவியின் மோசமான பேச்சு.! 



actor radharavi says that tamilans are fools

நடிகர் ராதாரவி நடிகர் டேனியலின் நடிப்பு பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, "41 வருடங்களாக நான் சினிமாவில் இருக்கிறேன். 400 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறேன். இந்த காலத்தில் நன்றாக நடித்தால் போதாது.

radha ravi

சக நடிகர்களே மக்களிடம் யாரும் பிரபலமாக கூடாது என்று அவர்களை கீழே இறக்கி விட திட்டம் போடுகின்றனர். இப்படி கெட்ட எண்ணம் பிடித்தவர்களுக்கு தான் கடவுள் பட வாய்ப்புகளை கொடுக்கிறார். அவர்களது நிலை உயர்ந்து விட்டால் எங்கிருந்துதான் தீய எண்ணங்கள் வருமோ தெரியவில்லை. 

அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சை தான் கைத்தட்டி ரசிகர்களும் ரசிக்கின்றனர். தமிழக மக்களை போல முட்டாள்கள வேறு எங்கேயும் பார்க்க முடியாது. நான் தைரியமாக இதை சொல்வேன். அப்படி கூறுவதால் என் படங்களை பார்க்காமல் கூட விட்டு விடுங்கள். நான் நடித்த படங்களை பார்க்காவிட்டால் உங்கள் ஹீரோக்களை உதாசீனப்படுத்துவது போல் ஆகிவிடும். 

radha ravi

தயவுசெய்து பிள்ளைகள் தங்களது பெற்றோர்களை கடைசி காலத்தில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். அவர்களை உடன் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். அவர்களது ஆசீர்வாதம் உங்கள் வாழ்நாள் முழுக்க அவசியம்." என்று தெரிவித்துள்ளார்.