சினிமா

அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் பறக்கிறார் நடிகர் பிரகாஷ்ராஜ்! ஏன்? அவருக்கு என்னாச்சு!! வருந்தும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, மிரட்ட

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். ஹீரோ, மிரட்டலான வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பலவற்றிலும் சிறந்து விளங்கும் அவர் தமிழ் மட்டுமின்றி பல மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அண்மையில் வெளிவந்த நவரசா படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் கைவசம் தற்போது அண்ணாத்த, கேஜிஎப் 2, பொன்னியின் செல்வன், புஷ்பா, மாறன் மற்றும் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்கள் உள்ளன. இந்த நிலையில் பிரகாஷ் ராஜ் கீழே விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு தோளில் சிறு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத் சென்றுள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், கீழே விழுந்துவிட்டேன். எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. ஹைதராபாத்திற்கு பறக்கிறேன். அங்கே என் நல்ல மருத்துவ நண்பரான குருராவா ரெட்டியின் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று சீக்கிரமே திரும்பி வருவேன் என பதிவிட்டுள்ளார்.  அதனைத் தொடர்ந்து அவருக்கு பலரும் குணமடைய வாழ்த்து தெரிவித்து  வருகின்றனர்.


Advertisement