"மோசமான அணுகுமுறை" சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு இயக்குனர் பா. ரஞ்சித் கண்டனம்..!
நடிகர் மணிவண்ணனின் மகன் யார் தெரியுமா? அட இந்த ஹீரோ தானா அது?
தமிழில் நடித்த குணச்சித்திர நடிகர்களில் மிகவும் முக்கியமான ஒருவர் நடிகர் மணிவண்ணன் அவர்கள். இவர் ஒரு இயக்குனர் என்பது நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. இவரின் இயக்கத்தில் 50 திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் வெளிவந்துள்ளன.
நடிகர் சத்யராஜும், மணிவண்ணனும் கல்லூரி நண்பர்கள். சத்யராஜை வைத்து சுமார் 25 திரைப்படங்கள் எடுத்துள்ளார் மணிவண்ணன் அவர்கள். 1983ஆம் ஆண்டு ஜோதி என்ற படம்தான் இவர் இயக்கிய முதல் திரைப்படம்.
அதன் பின்னர் 1984ஆம் ஆண்டு ‘நூறாவது நாள்’ என்கிற திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்தார் மணிவண்ணன். இவர் முதன் முதலாக வில்லனாக 1989 ஆம் ஆண்டு நடித்தார் இவர் இந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்து குறிப்பிடத்தக்கது .
மணிவண்ணனுக்கு இரண்டு குழந்தைகள் ஒரு மகள் மற்றும் மகன் . மகனின் பெயர் ரகுவண்ணன். இவர் நடிகர் விக்ராந்த நடித்த கோரிப்பாளையம் படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடித்த மாறன் படத்தில் சத்திராஜுக்கு மகனாக நடித்திருப்பார்.