எனக்கு அந்த ஆசையெல்லாம் இல்லை.! இதான் எதார்த்தம்..நடிகர் மம்மூட்டி ஓபன் டாக்!!actor-mamoothi-answer-to-how-to-remember-in-future

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. இவர் தமிழிலும் பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களை கொண்டுள்ளார். 71 வயது நிறைந்த அவர் தற்போதும் இளம் ஹீரோக்களுக்கு டப் கொடுக்கும் வகையில் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

வெவ்வேறு வித்தியாசமான கதாபாத்திரங்களில் இவர் நடித்து வெளிவந்த கண்ணூர் ஸ்கொயட், காதல் - தி கோர், ப்ரமயுகம் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அண்மையில் இவர் நடித்து வெளிவந்த டர்போ திரைப்படமும் வசூலை அள்ளியது. இந்நிலையில் அண்மையில் பேட்டி ஒன்றில் நடிகர் மம்மூட்டியிடம், வரும் காலத்தில் நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என விரும்புகிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

Mamoothi

அதற்கு அவர், இந்த உலகம் எத்தனையோ சிறந்த மனிதர்களை கண்டுள்ளது. அவர்களில் ஒரு சிலரை மட்டுமே மக்கள் நினைவில் வைத்து கொள்வர். இந்த உலகம் எத்தனை காலம் என்னை நினைவில் வைத்துக் கொள்ளும் என்று நினைக்கிறீர்கள்? 10 வருடம் அல்லது 50 வருடம் நான் மக்கள் மனதில் இருப்பேனா? திரைத்துறையில் ஆயிரக்கணக்கான நடிகர்கள் இருக்கின்றனர். அவர்களில் நானும் ஒருவன்.

இதையும் படிங்க: தனியாக சுற்றுலா சென்ற விக்னேஷ் சிவன், நயன்தாரா.. குழந்தைகள் எங்கே.? ரசிகர்கள் கேள்வி.!?

உலகத்தை விட்டு சென்றுவிட்டால் ஒரு சில வருடங்கள் மட்டுமே நினைவில் வைத்து கொள்வர். அதற்கு பின் எல்லோருமே காலத்தால் மறக்கடிக்கப்படுவர். இதுதான் எதார்த்தம். காலத்திற்கும் இந்த உலகம் என்னை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையெல்லாம் எனக்கு கிடையாது என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: "லோகேஷ் கனகராஜை பிடிக்காது, அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் நோக்கம்" பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..