"லோகேஷ் கனகராஜை பிடிக்காது, அவருக்கு பணம் சம்பாதிப்பது தான் நோக்கம்" பிரபலத்தின் சர்ச்சை பேச்சு..Producer controversy talk about cinema industry peoples

தயாரிப்பாளார் மாணிக்கம் நாராயணன்

கோலிவுட் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வந்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் செவந்த் சேனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கூலி, மாண்புமிகு மாணவன், வேட்டையாடு விளையாடு, இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தற்போது திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் மாணிக்கம் நாராயணன்.

lokesh kanagaraj

மாணிக்கம் நாராயணனின் சர்ச்சை பேச்சு

இது போன்ற நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனலுக்கு பேட்டியளித்த மாணிக்கம் நாராயணன், திரை பிரபலங்கள் குறித்து தொடர்ந்து பல சர்ச்சையான கருத்துக்களை பேசி வருகின்றனர். இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தால் அனைத்து பணத்தையும் இழந்து விட்டேன். அஜித் என்னிடம் பணம் வாங்கிவிட்டு இன்றுவரை திருப்பித் தரவில்லை என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: அட்லீ, லோகேஷ் வரிசையில் இணைந்த நெல்சன் திலீப்குமார்; படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இன்ப அதிர்ச்சி.! 

மேலும் இளையராஜா குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன், "இளையராஜாவை அனைவரும் திமிர் பிடித்தவர் என்று கூறுகின்றனர். ஆனால் இளையராஜாவிடம் திமிர் கொஞ்சம் கூட இல்லை. அவருடைய சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது. இது குறித்து தெரியாதவர்கள் அவரைக் குறித்து பேசக்கூடாது" என்று காட்டமாகப் பேசினார்.

lokesh kanagaraj

லோகேஷ் கனகராஜை பிடிக்காது

மேலும் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசிய மாணிக்கம் நாராயணன், "லோகேஷ் கனகராஜ் இயக்குனரா, இல்லை நடிகரா என்பது தெரியவில்லை. ஆனால் எனக்கு அவரை பிடிக்காது. அவருடைய படங்களில் மட்டுமே வன்முறை உள்ளது. வயலன்ஸ் வாழ்க்கை கிடையாது. பணம் சம்பாதிப்பதற்காக லோகேஷ் கனகராஜ் இப்படி எல்லாம் பண்ணக்கூடாது" என்று கூறியிருந்தார். இவ்வாறு திரை பிரபலங்கள் குறித்து தொடர்ந்து சர்ச்சையான கருத்தை தெரிவித்து வருகிறார்.

இதையும் படிங்க: "என் மூஞ்சி நல்லா இல்லன்னு கண்ணாடி கூட பாக்க மாட்டேன்" இயக்குனர் செல்வராகவனின் மனம் வருந்திய பேட்டி..