நடிகர் கிங்காங்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா! முதல்முறையாக அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்!!

நடிகர் கிங்காங்கிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்காரா! முதல்முறையாக அவரே பகிர்ந்த லேட்டஸ்ட் புகைப்படம்!!


actor-kingkong-son-photo-viral

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் கிங் காங். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த அதிசய பிறவி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஏராளமான படவாய்ப்புகளும் குவிந்தது.

பின்னர் அவர், கவுண்டமணி, செந்தில், வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் அசத்தி  மேன்மேலும் பிரபலமானார். இவர் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகர் கிங்காங் தனது நடிப்புத் திறமையால் பல பிரபலங்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

ஏராளமான விருதுகளை பெற்றுள்ள கிங்காங்கிற்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்துக் கூறி  மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.