அடி தூள்... கைதி 2 எப்போது.? கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்.!! குஷியில் ரசிகர்கள்.!!actor-kathi-gave-an-surprise-update-about-kaithi-2-fans

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் பிரம்மாண்டமாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்த இவர் வித்தியாசமான கதை களங்களை தேர்வு செய்து தமிழ் சினிமாவில் தனித்துவம் மிக்க நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் உருவான கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தனது பிறந்த நாள் விழாவில் பேசிய கார்த்தி கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார்.

கைதி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் கைதி. இந்தத் திரைப்படம் 2019 ஆம் வருடம் அக்டோபர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மேலும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படமாக கைதி அமைந்தது. மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவிலேயே வெளியாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தனர்.

tamil cinema

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கார்த்தி

நடிகர் கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு மே 25ஆம் தேதி அவரது ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர். இதனைப் பாராட்டும் வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ரசிகர்களை அழைத்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் கார்த்தி. அந்த விழாவில் பேசிய அவர் கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்டை கொடுத்து ரசிகர்களை மேலும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய கார்த்தி தற்போது இரண்டு படங்களில் நடித்திருப்பதாகவும் அவை ரிலீசுக்கு தயாராக இருக்கிறது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர் அடுத்த வருடம் கைதி 2 படப்பிடிப்பிற்கு லோகேஷ் கனகராஜ் வர சொல்லி இருப்பதாக கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: கோலிவுட்டில் பரபரப்பு... தளபதி படத்தை தட்டி தூக்கிய தல பட நிறுவனம்.!!

இதையும் படிங்க: அடடே... அஜித் குமாரின் வாழ்க்கையை மாற்றிய ரஜினிகாந்தின் அட்வைஸ்.!! சுவாரசியமான தகவல்.!!