கார்த்திக்கின் பையா திரைப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவு; அடடா மழை டா நினைவிருக்கா?..!Actor Karthik Starring paiya Movie 14 Years Completed 


கடந்த 2010ம் ஆண்டு ஏப்ரல் 02ம் தேதி, நடிகர்கள் கார்த்திக், தமன்னா, சோனியா தீப்தி, ஜெகன், ராமச்சந்தர் துரைராஜ், உமர் லலீப் உட்பட பலர் நடிக்க வெளியான திரைப்படம் பையா (Paiya).

லிங்குசாமி எழுத்து மற்றும் தயாரித்து வழங்கிய பையா திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படம் இன்று வரை ரசிகர்களால் கண்டுரசிக்கப்படும் அதிரடி காட்சிகள், காதல் படங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. 

இப்படம் வெளியாகி 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இளம் நாயகர்களாக இருந்து வந்த கார்த்திக் மற்றும் தமன்னா இணைந்து நடித்த வெற்றிப்படங்களில், பையா கவனிக்கத்தக்க இடத்தில் இன்று வரை இருக்கிறது. 

இப்படத்தில் இடம்பெற்ற அடடா மழ டா ஆடை மழடா பாடல் இன்று வரை ரசிகர்களால் கேட்டு ரசிக்கப்படுகிறது. 

மேலும், படத்தில் ஜெகன் மும்பையில் தமிழன் என்றாலே பயம் கொள்வார்கள் என வீர வசனம் பேசி, பின் அடையாளத்தை மாற்றி சுற்றித்திரியும் காட்சிகள் காமெடிக்கு பஞ்சமில்லாதவை என்பதும் குறிப்பிடத்தக்கது.