கார்த்திக் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி; ரீ-ரிலீஸ் ஆகிறது பையா திரைப்படம்.!Actor Karthi Tamannaah Bhatia Starring PaiyaMovie Re Release Soon 

 

கடந்த 2010-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம் பையா (Paiya). இப்படத்தில் நடிகர்கள் கார்த்திக், தமன்னா, சோனியா தீப்தி, ஜெகன் உட்பட பலரும் நடித்திருந்தனர். 

எதார்த்தமான கதைக்களம் கொண்டு அமைந்த இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் இடம்பெற்றிருந்த யுவன் சங்கர் ராஜாவின் இசை பலராலும் வரவேற்கப்பட்டது.

இப்படம் கடந்த 2, ஏப்ரல் 2010 அன்று வெளியான நிலையில், தற்போது 13 ஆண்டுகள் கழித்து மறுபடி ரீரிலீஸ் செய்ய தயாராகி வருவதாக பட தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.