சோழநாடு டூ ஜப்பான்.! மீண்டும் பிரபல கியூட் நடிகையுடன் ஜோடி சேரும் கார்த்தி.! யார்னு பார்த்தீங்களா!!Actor karthi and rashmika may act as pair injapan movie

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இறுதியாக அவரது நடிப்பில் வெளியான விருமன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. விருமன் திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வரும் 30ம் தேதி வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வந்தியத்தேவன்  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது. படத்தின் பிரமோஷன் பணிகளில் நடிகர் கார்த்தி மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்த மாதம் தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில்  உருவாகியுள்ள'சர்தார்' திரைப்படம் வெளியாக உள்ளது.

japan

இவையெல்லாம் முடிந்த பிறகு குக்கூ, ஜிப்ஸி படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஜப்பான் என்ற படத்தில் நடிக்க உள்ளாராம். கார்த்தியின் 24 வது படமான இதில் அவருக்கு ஜோடியாக, ஹீரோயினாக நடிக்க நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ராஷ்மிகா தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தின் மூலமே அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.