இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் எந்த பிரபல நடிகர் தெரியுமா இணையத்தில் வைரலாகும் போட்டோ.!?

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் எந்த பிரபல நடிகர் தெரியுமா இணையத்தில் வைரலாகும் போட்டோ.!?


Actor jei childhood photos viral

சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். பல முன்னணி நடிகர் மற்றும் நடிகைகளின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகுவதை பார்த்திருப்போம். அந்த வரிசையில் தற்போது நடிகர் ஜெய்யின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

Jai

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜெய். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே வெற்றி அடைந்துள்ளன. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'எங்கேயும் எப்போதும்' திரைப்படம் மிகப்பெரும் வெற்றி அடைந்து ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

இப்படம் ஜெய்யின் சினிமா வாழ்க்கையில் மிகப் பெரும் திருப்புமுனையாகவும் அமைந்தது. தமிழில் முதன் முதலில் 'சுப்ரமணியபுரம்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரும் வெற்றியடைந்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.

Jai

இவ்வாறு திரைப்படங்களில் பிசியாக இருக்கும் போதே இவருடன் ஒரு சில படங்களில் நடித்த நடிகை அஞ்சலியை காதலிப்பதாக திரைத்துறையில் கிசு கிசு பரவியது. மேலும் இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் தொடர் தோல்வியையும் அடைந்தன. இவ்வாறு ஒரு சில காரணங்களினால் தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் பெரிதாக வரவில்லை. இதனையடுத்து தற்போது ஜெய்யின் சிறு வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.